Header Ads

Header Ads

பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளத்தை முடக்கிய இந்தியா

பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை ‘ஹேக்கர்கள்’ முடக்கியதால் வெளிநாடுகளில் இருந்து தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
புல்வாமா தாக்குதலையடுத்து இந்திய அரசு மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு இடையிலான பூசல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் சார்பில் இவ்விவகாரம் தொடர்பாக எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பதை அறிந்துகொள்ள உலக நாடுகள் ஆவலுடன் உள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை ‘ஹேக்கர்கள்’ முடக்கியதால் வெளிநாடுகளில் இருந்து இந்த இணையதளத்தை பிறர் தொடர்புகொள்ள முடியாத நிலை நேற்று ஏற்பட்டது.
இந்த முடக்கத்துக்கு இந்தியாவை பாகிஸ்தான் பத்திரிகைகள் குற்றம்சாட்டும் நிலையில், ‘உள்நாட்டில் இருப்பவர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை தொடர்பு கொள்வதில் எந்த பாதிப்பும் இல்லை.
எனினும், ஆஸ்திரேலியா, பிரிட்டன், சவுதி அரேபியா, நெதர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரியவந்துள்ளது. இந்த குறைபாட்டை சீர்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன’ என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் முஹம்மது பைசல் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Powered by Blogger.