Header Ads

Header Ads

லன்ரைன் தின வரலாறு எவ்விதம் காதலர் தினமாக மாற்றம் பெற்றுள்ளது?

வலன்ரையன்" தினம் பற்றிப் பல்வேறு கதைகள் மக்கள் மத்தியிலே உலாவி வருகின்றன. ரோம நாட்டிலேயே இந்தக் கதைகளின் உருவாக்கம் இடம்பெற்றுள்ளது. ரோம நாட்டில் கிறிஸ்துவுக்கு முன்னர் பன்னிரண்டு தெய்வங்களை வழிபடும் முறை இருந்துவந்துள்ளது.

இதற்கு ரோம சக்கரவர்த்திகள் முழு ஆதரவையும் கொடுத்ததோடு. ரோம் நாட்டு பிரபுக்களும் இதற்கு முழுப்பலம் சேர்க்கும் விதமாகச் செயற்பட்டுள்ளனர். ரோம நாட்டின் காதல் தெய்வங்களாக லுபேர்கஸ் மற்றும் பவுனஸ் ஐயும் விவசாயத்திற்கான தெய்வங்களாக ரொமுலஸ் மற்றும் றேமஸ்ஐயும் கொண்டிருந்தனர்.

ஆதிகால ரோம சக்கராதிபத்தியத்திலேயே 'வலன்ரையன்' நாள் பெப்ரவரி 14ல் கொண்டாடப்பட்டுள்ளது எனக் கொள்கின்றனர். ரோமர்கள் 'யுனோ' என்னும் தெய்வம் பெண்களின் தெய்வமாகவம் திருமணத்திற்கான தெய்வமாகவம் கொண்டிருந்தனர். அது பெப்பரவிரி 14ம் நாள் கொண்டாடப்பட்டு வந்துள்ளது.
அதற்கு அடுத்த நாள் பிள்ளைப்பேற்றுக்கான தெய்வமாக லுபேர்கஸ் மற்றும் பவூனஸ் கொண்டாடப்பட்டுள்ளனர். கனடா அரசாங்கம் குடும்ப நாள் என பொது விடுமுறையையே அறிவித்தள்ளது என்றால் காலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி இன்பம் நுகரத்தானோ என எண்ணத்தோன்றுகின்றது.

இந்த நடைமுறை இளைஞர்களும் இளம் யுவதிகளும் மிகவும் இறுக்கமாக தனிமைப் படுத்தப்பட்டிருந்தமையால் அவர்களை ஒன்று சேரும் விழாவாக இந்த நிகழ்வு இடம்பெற்று வந்துள்ளது.

இந்த விழாவில் திருமணப் பருவமடைந்து பெண்களின் பெயர்கள் எழுதப்பட்டு ஒரு சாடியில் இடப்பட்டிருக்கும் அதில் ஒன்றை ஒவ்வொரு இளைஞனும் எடுத்து யாருடைய பெயர் எழுதப்பட்டிருக்கின்றதோ அப்பெண்ணோடு இணைத்துச் சோடி சேர்த்து அந்த விழாக்காலத்தில் ஒன்றாக இணைந்துகொள்ளவர்.

இது சிலவேளைகளில் ஓராண்டிற்கும் நீடிப்பதாக அமைந்திருக்கும். அவர்கள் ஒருவரோடு ஒருவர் காதல் கொண்டால் அவர்கள் திருமணம் செய்துகொள்வர். இதனை ஒரு கிறிஸ்தவ மரபாகக் கைக்கொண்டனர். இத்திருமணங்கள் இடத்தினால் தீர்மானிக்கப்படுகின்றது அது அவரக்ளுக்குக் கிடைக்கும் வாய்ப்பாகக் கொள்ளப்படவில்லை.

இது வலன்ரையனால் ஆக்கப்பட்டதல்ல சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். ஆனால் இது அவரது காலத்தில் முனைப்புற்றிருந்தமையால் அவரின் பெயரைப் பெற்றுக்கொண்டது எனவும் கருதுகின்றனர்.

வலன்ரையன் ரோம சக்கரவர்த்தி 2ம் குளோடியஸ்சின் போருக்காக எல்லா ஆண்களும் அவர்களது மனைவியரை விட்டு விலகி இராணுவத்தில் இணையவேண்டும் எனக் கட்டளையிட்டமையை வலன்ரையன் கடுமையாக எதிர்த்ததோடு திருமணம் செய்துககொள்ளக் கூடாது என விதித்த சட்டத்திற்கு விரோதமாக அவர் திருமணங்களை நடத்திவைத்தார் இதனைவிட வேறு ஒரு கதையும் நிலவுகின்றது.

குளோடியஸ் மன்னன் ரோம நாட்டினைச்சேர்ந்த எல்லோரும் கிறிஸ்துவை வணங்கக் கூடாது எனவும் பன்னிரண்டு தெய்வங்களையும் கண்டிப்பாக வணங்க வேண்டும் என்று கட்டளை இட்டான். அத்துடன் கிறிஸ்தவ மதத்தோடு தொடர்பு வைத்ததிருப்போர்களுக்கு மரணதண்டனை எனவும் பிரகடனப்படுத்தி இருந்தான்.

ஆனால் வலன்ரயன் தன்னை கிறிஸ்த்தவ மதக்கொள்கையோடு அர்ப்பணித்துக் கொண்டார். மரணதண்டனைப் பயமுறுத்தல்கூட அவர் கொண்டுள்ள நம்பிக்கையைப் பின்பற்றுவதில் இருந்து தடுத்துவிடவில்லை.
வலன்ரையன் ஒரு மதத்துறவி. ரோம நாட்டின் போர்வீரர்கள் திருமணம் செய்யக் கூடாது எனக் கடுமையான கட்டுப்பாட்டை குளோடியஸ் விதித்திருந்ததை எதிர்த்து போர்வீரர்களுக்குத் திருமணம் செய்துவைத்தார். அதனால் அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேளை அவரது வாழ்வின் இறுதிக்கிழமை குறிப்பிடத்தக்க அற்புத நிகழ்வுகள் நடைபெற்றன. சிறைக்காவலர் பிறவிக் குருடான தனது மகள் யூலியாவை அவரிடம் கல்வி பயில அழைத்துவந்தார்.

வலன்ரயன் யூலியாவிற்கு ரோம வரலாறு, கணிதம், இயற்கையின் நியதி, கதைகள் என்பவற்றோடு கடவுளைப்பற்றியும் கூறினார். வலன்ரயன் மூலம் உலகை அறிந்து கொண்டார் யூலியா.

யூலியா ஒரு நாள் மிகுந்த ஆதங்கத்தோடு 'வலன்ரினஸ் கடவுள் உண்மையிலேயே எமது பிரார்த்தனைகளைச் செவிமடுப்பாரா? கேட்டவற்றைத் தருவாரா?' என்று கேட்டார். அதற்கு அவர் 'ஆம் என் குழந்தாய் அவர் ஒவ்வொருவரது பிரார்த்தனையையும் செவிமடுப்பார்' என உரைத்தார் 'நான் இறை வனிடம் என்னத்தை வேண்டுகின்றேன் என்றால் எனக்குப் பார்வை வரவேண்டும். உலகத்தை நான் பார்க்கவேண்டும்.

நீங்கள் கூறியவை எல்லாவற்றையும் எனது கண்களால் பார்க்கவேண்டும்' என்று யூலியா கூறினார். அதற்கு வலன்ரயன் 'நாங்கள் கடவுள் மீது உண்மையான நம்பிக்கை வைத்தால் அவர் எங்களுக்கு சிறந்தது எதுவோ அதனைச் செய்வார்' என்று விடைஅளித்தார்.

யூலியாவோ 'நான் கடவுளை உண்மை யாகவே நம்புகின்றேன்' என உரக்கக் கூவிக்கொண்டே முழந்தாளிட்டு அவரது கைகளை இறுகப்பற்றிக் கொண்டார். அவர்கள் அமைதியாக இருந்தபோது சிறைக்கூடுகளிடையே மிகப்பிரகாசமான ஒரு ஒளி பரவியது. யூலியாவோ 'எனக்குக் கண்பார்வை கிடைத்து விட்டது' என ஆனந்தமாக ஆர்ப்பரித்தார்.

வலன்ரயன் எழுதிய இறுதி மடலில் 'ஆண்ட வனுக்கு நெருக்கமாக இருந்துகொள் உனது வலன்ரயன்' என யூலியாவுக்கு எழுதி யிருந்தார். அவர் கி.பி. 270 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ம் நாள் இறைவனடி சேர்ந்தார். அத்தினமே அவரது நினைவு தினமாகவும் புனித காதலர் தினமாகவும் உலகெங்கும் உள்ள மக்களால் நினைவுகூரப்படுகின்றது.

வலன்ரையன் யூலியாவிற்கு எழுதிய கடிதம் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு வலன்ரையனை நினைவுகூரும் முகமாகவும் இந்த 'காதலர் தினம்' கொண்டாடப் படுகின்றது என்னும் கதையும் உண்டு.

இதற்குப் பிறிதாக வலன்ரையன் பற்றி என்னுமொரு கதையும் உண்டு. இரண்டாவது குளோடியஸ் மன்னனுக்கு எதிராக சிறையில் இருந்த கிறிஸ்தவர்களை இரகசியமாக விடுதலை செய்தார் எனவும் அது மன்னனுக்குத் தெரியவரவே அவர் அடித்து உதைக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனை தீர்க்கப்பட்டு கொல்லப்பட்டார்.

ரோமிலிருந்து ஐரோப்பாவெங்கும் கிறிஸ்தவம் பரவிய வேளை வலன்ரயன் ஒரு நாயகனாகக் காணப்பட்டு இதனால் போப் செலலியஸ் அவர்களால் பெப்ரவரி 14ஆம் நாள் கி.பி. 498ம் ஆண்டு வலன்ரையின் புனிதராகப் பிரகடனப்படுத்துப்பட்டார்.

இதன்பின்னர் லுபேர்கலியா (Lupercalia) விழா பெப்பரவரி 15ம் நாளுக்கு மாற்றப்பட்டது. இதனால் விவசாயிகளின் பெருநாளாகக் கொண்டாட்பபட்ட பேகன் விழா முடிவுக்கு வந்தது.

காதலர் தினத்திற்குப் பல்வேறு வராற்றுப் பதிவுகள் கர்ண பரம்பரைக் கதைகள் வாயிலாக மக்கள் மத்தியில் நிலவி வருவது கண்கூடு. எனினும் 14ம் நூற்றாண்டுவரை காதலர் தினம் பிரபலமடைந்திருக்கவில்லை.

ஆனால் 14ம் நூற்றாண்டில் 'காதல்' என்பதோடு தொடர்புடையதாக கிறிஸ்தவ பெருநாள் இடம்பெறத்தொடங்கியது. மத்தியகால் வரலாற்று ஆசிரியர் கென்றி ஆன்ஸ்கார் கெலி அவர்களின் author of Chaucer and the Cult of Saint Valentine என்ற நூலில் சௌசரைப் பற்றிக் குறிப்பிட்டு அவர்தான் வலன்ரையனை முதலில் தொடர்பு படுத்தியவர் என்பதிலிருந்து அது பிரபலமடையத் தொடங்கியது.

அத்தோடு பெப்பரவரிமாதம் பறவைகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் காலமாகவும் கொள்ளப்பட்டு அதனை காதலோடு தொடர்புபடுத்தப்பட்டதாக பெப்பரவரி 14 முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் கருத்திற்கொள்ளற்பாலது.

1381இல் இங்கிலாந்து இளவரசன் இரண்டாவது றிச்சாட்டுக்கும் பொகிமிய இளவரசி ஆனுக்கும் திருமண உடன்பாடு ஏற்பட்டதனைக் கௌரவிக்கும் முகமாக சௌசரால் இசையமைக்கப்பட்ட பாடல் பெப்பரவரி 14ம் திகதியோடு தொடர்புடையதாக "The Parliament of Fowls” “The Royal engagement” “the mating season of birds’’ amd ‘Valentine’s Day என்பனவெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையன. அவை அனைத்தும் பெப்ரவரி 14 அடிப்படையாகக் கொண்டுள்ளன என்பதும் கருத்திற்கொண்டு ஆய்வு நடத்துவதால் மட்டுமே 'காதலர் தினம்' எப்போது ஆரம்பமானது என்பதனை அறிந்துகொள்ள முடியும்.

புதுமைகளை ஓடும் மனித இனம், காதலர் தினம் என்பதனையும் உலகோடு ஒட்ட வைத்துள்ளமை உண்மையிலேயே வர்த்தக நோக்கத்திற்காக வர்த்தக நிறுவனங்கள் விரித்த வலையில் Boxing Day, Black Friday, Fathers day, Mothers day, என்பனவற்றோடு காதலர் தினத்தையும் மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்க்ள மத்தியில் ஊடுருவிப்பாய விட்டுள்ளது.

காதல் அம்பு இலகுவாக உள்ளங்களைகத் தைத்து இரத்தத்தைக் கசியவைப்பதில் இலகுவானதாக இன்று காணப்படுகின்றது. பாரம்பரிய மரபுகளை உடைய இந்தியா போன்ற நாடுகளிலேயே காதலர் தினம் இன்று விசுவரூபம் எடுத்துள்ளமை அண்மைக்கால நிகழ்வுகள் படம்பிடித்துக்காட்டுகின்றன.

கண் தெரியாத சிறுமியை கத்தோலிக்கபோதகர் கண்பார்வை கிட்டவைத்தாரோ இல்லையோ உலகை அறியவைத்துள்ளார் அதற்குக் கல்வியே காரணமாக அமைந்திருந்தது என்பதனை மறுப்பதற்கும் இல்லை. அகக் கண்கொண்டு பார்க்கும் பக்குவத்தை கல்விதான் தருகின்றது என்பதற்கு வலன்ரயன் வரலாறு ஒரு எடுத்துக்காட்டாக அமைகின்றது

No comments:

Powered by Blogger.