யாழில் வாங்கிய பணத்தைக் கேட்கச் சென்ற குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்
யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் கைமாற்றாக வாங்கிய பணத்தைக் கேட்கச் சென்ற குடும்பப் பெண்ணை குடும்பஸ்தர் ஒருவர், தலைக்கவசத்தினால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
“கொடுத்த பணத்தை வாங்கச் சென்ற வேளை, தன்னை தலைக்கவசத்தினால் தாக்கிவிட்டு தனது கையைப் பிடித்து இழுத்தார் என பாதிக்கப்பட்ட பெண் கொடிகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்தப் பெண் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேவேளை வீடு புகுந்து தாக்கியதாகக் கூறி குறித்த குடும்பஸ்தரும் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்
No comments: