கட்டுநாயக்கவை தாக்க திட்டம்
கட்டுநாயக்க அதி உயர் பாதுகாப்பு வலயமான விமான நிலையத்திற்கு மேல் ட்ரோன் கெமராவை அனுப்பி படம் பிடிக்க முற்பட்ட மாலைத்தீவு நாட்டவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடான, தமின்னகஹவத்த பகுதியில் வைத்து நேற்று (02) இரவு 8 மணியளவில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கடான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: