யாழ் விவசாயிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பயங்கர பாம்பு
யாழ்ப்பாணத்தில் அரிதான மலைப் பாம்பு ஒன்று வயல் அறுவடையின்போது அகப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
வடமராட்சி, கரவெட்டி கிராய்ப் பகுதியிலேயே 13 அடி நீளமான இந்த மலைப் பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது.
வயல் உரிமையாளர்கள் தமது வயலினை அறுவடை செய்தபோது இந்த மலைப் பாம்பு அங்கு பதுங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது. இதனை குறித்த வயல் உரிமையாளர் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த பாம்புக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பில் வேறு தகவல்கள் கிடைக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இந்திய பாறை மலைப்பாம்பு (Indian Rock Python- Python Molurus) இனத்தைச் சேர்ந்த இந்த பாம்புகள் இலங்கையின் வரண்ட நிலக்காடுகளையே விருப்பமான வாழிடங்களாக கொண்டுள்ளன. குறிப்பாக வன்னிப் பகுதிகளில் வாழும் இவை தமிழர்களால் வெங்கிணாந்திப் பாம்பு என அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் காணப்படாத இந்த மலைப்பாம்பு வடமராட்சியில் பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments: