2 பெண்களை கொன்ற காமகொடூரன் மேலும் பல பெண்களை கற்பழித்து கொன்றானா?
செஞ்சி அருகே 2 பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்த காமகொடூரன் மேலும் பல பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது. பெரும்புகை கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன்(வயது 25). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி கலைச்செல்வி இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.
அதே பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி குட்டியம்மாள்(43). இந்த நிலையில் தேவேந்திரனுக்கும், குட்டியம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.
கடந்த 18-ந் தேதி குட்டியம்மாள் ஆடு மேய்க்க சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த அவரது மகன் கார்த்திக் பல இடங்களில் தேடினார். பின்பு அங்குள்ள மலை அடிவாரத்துக்கு சென்றார். அங்கு தனது தாய் குட்டியம்மாள் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ? அவரை கொலை செய்து பிணத்தை மலை அடிவாரத்தில் வீசியிருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தார்.
இது குறித்து கார்த்திக் செஞ்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மலைப்பகுதிக்கு சென்று குட்டியம்மாள் பிணத்தை மீட்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் குட்டியம்மாளுக்கும், தேவேந்திரனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் தேவேந்திரனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார்.
போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் குட்டியம்மாளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
குட்டியம்மாளை கொலை செய்து பிணத்தை மலையின் உச்சியில் வீசியதாக தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் தேவேந்திரனை கைது செய்தனர். மேலும் அவரிடம் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு வீமாராஜ் விசாரணை நடத்தியபோது மேலும் ஒரு இளம்பெண்ணை கொன்று பிணத்தை மலையில் வீசிய தகவல் தெரியவந்தது.
போலீசில் தேவேந்திரன் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
செஞ்சி நாட்டார் மங்கலத்தை சேர்ந்த ஏழுமலையின் மனைவி சுமதி(33) என்பவருக்கும், எனக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் தனிமையில் சந்தித்து பேசி வந்தோம்.
இதனைத்தொடர்ந்து அடிக்கடி எங்கள் வீட்டுக்கு சுமதி வந்தார். இதனால் என் மனைவி கலைச்செல்வி சந்தேகம் அடைந்து என்னை கண்டித்தார். மேலும் சுமதியிடம் உள்ள பழக்கத்தை கைவிடுமாறு அடிக்கடி கூறி வந்தாள். இல்லையென்றால் நான் என் பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவேன் என்று கூறி என்னை மிரட்டி வந்தாள்.
இதனால் கவலையடைந்த நான் சுமதியிடம் இனிமேல் என் வீட்டுக்கு வராதே என்னையும் சந்திக்காதே என்று பலமுறை கூறினேன். இருப்பினும் சுமதி தொடர்ந்து என் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள். அப்போது சுமதி என்னைப்பார்த்து உன்னை பிரிந்து என்னால் இருக்க முடியவில்லை. என்னை அடிக்கடி சந்திக்க வேண்டும் என்று தொந்தரவு செய்தாள்.
இதனால் சுமதி மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. மேலும் அவளை கொலை செய்ய திட்டமிட்டேன். இதனைத்தொடர்ந்து அவரை மலைப்பகுதி சென்று உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி அழைத்தேன். அவளும் வந்தாள். அங்கு நாங்கள் உல்லாசமாக இருந்தோம். அப்போது சுமதி நீ என்னை கைவிட்டு விடக்கூடாது நான் அழைக்கும்போது எல்லாம் நீ கண்டிப்பாக வரவேண்டும் என்று கட்டளை இட்டாள்.
இதனால் நான் ஆத்திரம் அடைந்தேன். உன்னால் என் மனைவி அடிக்கடி என்னிடம் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுகிறாள் என்று கூறி அவளை திட்டினேன். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்து சுமதியின் கழுத்தை நெரித்து கொன்றேன்.
பின்பு பிணத்தை மலையில் வீசினேன். மேலும் நான் இறந்துபோன சுமதியின் உடலை செல்போனில் வீடியோ எடுத்து பதிவு செய்துகொண்டேன். பின்பு நான் வீட்டுக்கு சென்றேன். அப்போது வீட்டில் இருந்த என் மனைவி கலைச்செல்வியிடம் இனிமேல் சுமதி வீட்டுக்கு வரமாட்டாள் அவளை அடித்து கொலை செய்துவிட்டேன். என்று கூறினேன். சுமதியின் பிணத்தை வீடியோ எடுத்த காட்சியையும் தனது மனைவியிடம் காண்பித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து போலீசார் தேவேந்திரன் வீட்டில் சோதனையிட்டனர். அப்போது போலீசாரிடம் ஒரு ‘மெமரிகார்டு’ சிக்கியது. அதனை போலீசார் செல்போனில் போட்டு பார்த்தபோது, தேவேந்திரன் ஒரு பெண்ணின் பிணத்தை வீடியோ எடுத்தபடி, ‘நான் சொல்லியதை கேட்காமல் எனது வீட்டுக்கு அடிக்கடி வந்ததால் தான் நீ இப்போது பிணமாக கிடக்கிறாய்’ என்று கூறும் காட்சி பதிவாகி இருந்தது. இதைகண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் தேவேந்திரன் கூறிய மலை பகுதிக்கு சென்று சுமதியின் உடலை தேடினர். அங்கு எலும்புக்கூடாக கிடந்த சுமதியின் உடலை மீட்டனர். அந்த எலும்புக்கூட்டை புதுவை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், செஞ்சி துணைபோலீஸ் சூப்பிரண்டு வீமாராஜ் ஆகியோர் 2 பெண்கள் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட மலையை பார்வையிட்டனர்.
2 பெண்களை ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்த காமகொடூரன் தேவேந்திரன் மேலும் பல பெண்களை உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
மேலும் செஞ்சி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் இளம்பெண்கள் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதா? அவர்கள் யார்? யார் மீட்கப்பட்டுள்ளனர். எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் தங்களது விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
2 பெண்களை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட காமகொடூரன் தேவேந்திரன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். மேலும் இவன் பல பெண்களை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் தேவேந்திரனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து விரைவில் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படலாம் என்று தெரிகிறது.
கள்ளத்தொடர்பில் இருந்த 2 பெண்களை அடித்துக் கொன்று மலையடிவாரத்தில் வீசியதும், அதில் ஒரு பெண்ணின் பிணத்தை வீடியோவாக பதிவு செய்து மனைவியை சமாதானப்படுத்திய சம்பவமும் செஞ்சி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments: