யாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ஈடுபட்டனர் என வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் ஒருவர் சேர்க்கப்பட்ட போது அங்கு கடமையில் ஒரு தாதிய உத்தியோகத்தரே இருந்துள்ளார். ஏனையோர் கடமை நேரத்தில் காணவில்லை என்று வைத்தியரால் தேடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த பிரிவின் அறை ஒன்றை வைத்தியர் திறந்த போது, ஆண் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் பெண் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் தகாத உறவில் ஈடுபட்டதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவர்களை தனது அலைபேசியில் ஒளிப்பதிவு செய்த குறித்த வைத்தியர், சம்பவம் தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார்.
சுமார் 40 வயதுடைய ஆண் தாதிய உத்தியோகத்தரும் சுமார் 28 வயதுடைய பெண் தாதிய உத்தியோகத்தருமே இவ்வாறு தகாத உறவில் ஈடுபட்ட போது ஆடையின்றி ஒளிப்படம் எடுக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவின் வைத்தியர்கள் மற்றும் சக தாதிய உத்தியோகத்தர்களால் வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டது.
“உரியவர்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்தன. அதற்கான ஆதாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆண் தாதிய உத்தியோகத்தருக்கு எதிரான இதற்கு முன்னரும் பல முறைப்பாடுகள் உள்ளன.
சம்பவம் தொடர்பில் நிர்வாக ரீதியான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விசாரணைகள் நிறைவில் அறிக்கை தயாரிக்கப்பட்டு சுகாதார அமைச்சுக்கு அனுப்பப்படும்.
சுகாதார அமைச்சே மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கும்” என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்
No comments: