ஈழத்தின் உலகப் புரட்சியை வரிப்படுத்தியது புதிய திரைப்படம்
தமிழகமும், தமிழ் திரையுலகமும் அவ்வப்போது ஈழத்தினையும், ஈழப் போராட்டத்தினையும், ஈழத் தமிழர்களையும் தங்களின் படைப்புக்களில் பெருமைப்படுத்துவதில் தவறியதில்லை.
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பில் இலக்கியப் படைப்புக்களில் மாத்திரமல்ல, சினிமாத்துறையிலும், பாடல்களிலும் பெருமைப்படுத்துவதோடு அதனை தைரியமாக காட்சிகளாகவும் அமைந்து வந்திருக்கிறது.
அதன்படி, தற்போது இன்னுமொரு திரைப்படமும் ஈழத்தினையும், தமிழையும் பாடலின் மூலமாக சிறப்பாக்கியிருக்கிறது.
“ஈராயிரம் ஆண்டாகியும் தமிழ் தரணியை ஆளும், இது உலகெங்கிலும் பறைசாற்றிய உயர் இனம் எங்கள் ஈழம்” தமிழகத்தில் இருந்து வெளிவரவிருக்கும் LKG திரைப்படப் பாடல் வரி இவ்வாறு அமைந்துள்ளது.
ஆர்.ஜே.பாலாஜியின் கதை திரைக்கதை எழுத்தில் உருவாகியிருக்கிறது எல்கேஜி திரைப்படம். இப்படம் இன்னமும் வெளியாகாத நிலையில் தமிழக அரசியல்வாதிகளை கிண்டல் செய்யும் வகையில் அமைந்திருப்பதாகவும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இத்திரைப்படத்திற்கான பாடல்கள் சில வெளியாகியுள்ளன. தமிழைப் போற்றிப்பாடும் பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அப்பாடலில் தமிழின் பெருமையும், ஈழத்தின் தமிழ் காப்பும் மிகத் தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், “ஈராயிரம் ஆண்டாகியும் தமிழ் தரணியை ஆளும், இது உலகெங்கிலும் பறைசாற்றிய உயர் இனம் எங்கள் ஈழம்” என்னும் வரி வரும் பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியக் கொடியும் பறக்கவிடப்பட்டுள்ளது.
இப்படப்பாடலை தமிழகத்தின் முன்னனி பாடலாசிரியர்களில் ஒருவரான பா.விஜய் எழுதியிருக்கிறார்.
இதனால் இப்பாடலுக்கு கூடுதல் சிறப்போடு உலகத் தமிழர்கள் அதனைப் பகிர்ந்து வருவதுடன், படக் குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகிறார்கள்
No comments: