Header Ads

Header Ads

பலாலி விமான நிலையம் மற்றும் துறைமுகம் வளர்ச்சி தொடர்பாக வெளியான செய்தி

பலாலி விமான நிலைய அபிவிருத்தி மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்வரும், 15ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

இந்திய அரசாங்கமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து, இந்த இரண்டு அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளன.

சுமார் 2 பில்லியன் ரூபாய் செலவில் இந்த அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.

இதில் காங்கேசன்துறை முறைமுக அபிவிருத்திக்கு, இந்திய அரசாங்கம் 45.27 மில்லியன் டொலரை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

15 மாதங்களுக்குள் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.இதன் பின்னர் பலாலி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், காங்கேசன்துறை துறைமுகம் வழியாக, வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது

No comments:

Powered by Blogger.