புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் தொடர்பில் கருணா வெளியிட்டுள்ள தகவல்
புலம்பெயர் நாடுகளிலுள்ள பல இளைஞர்கள் இலங்கைக்கு திரும்பி வர எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் பலர் தாயகம் திரும்ப எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகமாக திறந்த மனதுடன் உள்ள இளைஞர்கள் இவ்வாறு இலங்கைக்கு வருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சமகாலத்தில் பல்வேறு புலம்பெயர் அமைப்புகளுடன் கலந்துரையாடல் மேற்கெண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு இடையில் சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கான முயற்சிகளை தான் மேற்கொண்டு வருவதாக கருணா மேலும் தெரிவித்துள்ளார்.
கருணாவை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்று இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது
No comments: