விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அணி தளபதி கைது
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காரைக்காடு காட்டுபகுதியில் புதையல் தோண்டிய விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த 8 பேரும் நேற்று (சனிக்கிழமை) இரவு கைது செய்துள்ளதுடன், அவர்கள் அகழ்விற்காக பயன்படுத்திய பக்கோ இயந்திரம் ஒன்றையும் மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் போதே 8 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் கைது செய்யப்பட்டவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அதில் சிங்களவர் ஒருவர் உட்பட 5 பேர் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்தோடு இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments: