பசங்கள பார்த்தாலே பிடிக்காது
ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர்.லோக்கல்’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதில் நயன்தாரா பேசும் ‘லோக்கலான பசங்கள பார்த்தாலே பிடிக்காது’ என்ற வசனம் வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. சிவகார்த்திகேயன் – நயன்தாராவுக்கும் இடையே நடக்கும் மோதலை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.
இப்படம் மே மாதம் 1ம் தேதி வெளியாக இருகிறது
No comments: