வவுனியாவில் ஒன்று கூடிய இளைஞர்களால் பதற்றம்
வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே இன்று மாலை 5.30மணியளவில் இளைஞர்கள் ஒன்று கூடியதினால் அவ்விடத்தில் சற்று பதட்ட நிலை காணப்பட்டதுடன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
வவுனியா வைரவப்புளியங்குளம் வைரவர் வீதியில் முச்சக்கரவண்டியொன்று வீதியின் மறுபக்கத்திற்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் அதே வீதியில் மோட்டார் சைக்கிலொன்று வந்துள்ளது.
முச்சக்கரவண்டி திரும்புவதினை திடீரென அவதானித்த மோட்டார் சைக்கில் வண்டியின் சாரதி மோட்டார் சைக்கிலினை வீதியினை விட்டு கீழே இறக்கியுள்ளார்.
இதன் போது மோட்டார் சைக்கில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளானார். இச் சம்பவத்தினால் மோட்டார் சைக்கில் பகுதியளவில் சேதமடைந்திருந்தது.
இதன் போது அவ்விடத்தில் ஒன்று கூடிய இளைஞர்கள் மோட்டார் சைக்கிலை முச்சக்கரவண்டியின் உரிமையாளர் தான் திருத்தித் தர வேண்டுமென தெரிவித்தனர். இதன் காரணமாக அவ்விடத்தில் சற்று பரபரப்பான நிலை காணப்பட்டது.
இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
முச்சக்கரவண்டி திரும்புவதை அவதானிக்காமல் வந்தமை மோட்டார் சைக்கில் சாரதியின் தவறாகும்.
முன்னால் செல்லும் வாகனத்தினை அவதானிக்க முடியாமல் வந்திருந்தால் குறித்த மோட்டார் சைக்கில் அதி வேகமாகவே வந்திருக்க வேண்டும்
அத்துடன் மோட்டார் சைக்கில் முச்சக்கரவண்டியுடன் மோதவுமில்லை அவ்வாறு மோதி விபத்து ஏற்பட்டிருந்தாலும் ஒர் வாகனத்தின் பின்புறத்தில் மோதியமை மோட்டார் சைக்கிலில் சாரதியின் தவறேயாகும்.
வீதியினை விட்டு விலகி கீழே விழ்ந்தமை மோட்டார் சைக்கிலின் சாரதியின் கவனயினமே என விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்ததுடன் குறித்த மோட்டார் சைக்கிலை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்வதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: