Header Ads

Header Ads

ஜேர்மானியரை அகதி ஒருவர் கொலை செய்த வழக்கில் எதிர்பாராத திருப்பம்

ஜேர்மனியின் Chemnitz பகுதியில் அகதி ஒருவர் ஜேர்மானியர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கின் பின்னணியில் போதைத் தகராறு இருந்ததாக தெரியவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியே அகதிகளுக்கெதிராக திரும்பும் ஒரு சூழலை உருவாக்கிய அந்த ஜேர்மானியரின் கொலைக்கு, போதைப் பிரச்சினையே காரணம் என ஜேர்மன் ஊடகங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் Daniel Hillig என்னும் ஜேர்மானியர் அகதிகளால் குத்திக் கொல்லப்பட்டார்.

Chemnitz நகர தெருக்களில் அகதிகளுக்கெதிராக போராட்டங்கள் வெடித்தன. யூதர் ஒருவருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்று தாக்குதலுக்குள்ளானது. இந்த சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில், Hillig கொலை தொடர்பான தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை.


Hillig கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டாலும் முக்கிய குற்றவாளி தலைமறைவாகி விட்டான்.
இதற்கிடையில் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், ஒரு நபர் Hilligஇடம் வந்து போதைப்பொருளை உபயோகிக்க வசதியாக ஒரு அட்டையை கேட்டதை தான் கண்டதாக தெரிவித்துள்ளார்.

அப்போதுதான் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டிருக்கிறது.

அந்த சண்டையின் ஒரு பகுதியாக Hillig கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். பிரேத பரிசோதனையில் இறந்த Hilligஇன் உடலிலும் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே கொல்லப்படும்போது Hilligம்போதையில் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எனவே ஜேர்மனியில் இவ்வளவு பெரிய போராட்டங்களுக்கு காரணமாக இருந்த கொலை, போதைப்பொருள் சண்டையால் ஏற்பட்டிருக்கக்கூடும் என கருதப்படுகிறது.

சொல்லப்போனால் இந்த போராட்டங்களால் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் அரசே ஆட்டம் கண்டதும், அதைத் தொடர்ந்து உள்நாட்டு உளவுத்துறை தலைவரான Hans-Georg Maassen தனது பதவியை விட்டு அகற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது

No comments:

Powered by Blogger.