Header Ads

Header Ads

இரவு வேளையில் அதிர்ந்த கொழும்பு வரலாற்றை புரட்டி போட்ட கைது

கொழும்பில் நேற்றைய தினமும் 294 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுளதாக அதிர்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கை வரலாற்றிலேயே கைப்பற்றப்பட்ட பெருமளாவான பெறுமதியையுடைய போதைப்பொருளாக இது காணப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கொழும்பு கொள்ளுப்பிட்டி வர்த்தக கட்டிடதொகுதி வாகனத் தரிப்பிடத்தில் வைத்து இரண்டு சிற்றுந்துகளிலிருந்தே இவை நேற்றிரவு மீட்கப்பட்டதாகவும் இவற்றின் பெறுமதி 2.94 பில்லியன் ரூபா என கணிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படை சுற்றிவளைத்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போதே இது கைப்பற்றப்பட்டதுடன் பாணந்துறை கெசெல்வத்த பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் உப்புக் கல்லு போல பொதிசெய்து சூசகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்த பொலிஸார், அவற்றுடன் கைப்பற்றப்பட்ட இரண்டு வாகனங்களையும் சந்தேகிகள் இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறுகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் நாள் 231 கிலோவும், டிசம்பர் 31ஆம் நாள் 278 கிலோவும், இவ்வாண்டு ஜனவரி மாதம் 17ஆம் நாள் 5 கிலோவும், ஜனவரி 22ஆம் நாள் 90 கிலோவும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Powered by Blogger.