Header Ads

Header Ads

பஸ் – லாரி நேருக்கு நேர் மோதல் 13 பேர் உடல் நசுங்கினர்

பெரும்பாறை அருகே அரசு பஸ்- லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தாண்டிக்குடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கொடைக்கானல் கீழ் மலையில் உள்ள ஆடலூரில் இருந்து மதுரை நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. நிலக்கோட்டை முகவனூத்தை சேர்ந்த டிரைவர் செல்வராஜ் பஸ்சை ஓட்டினார். இந்த பஸ் பெரும்பாறை அருகே குப்பம்மாள்பட்டி வெக்கடிகாடு என்ற இடத்தில் சென்ற போது எதிரே லாரி வந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி கண்ணாடி நொறுங்கியது. விபத்தில் பஸ் டிரைவர் செல்வராஜ், லாரி டிரைவர் டேனிஸ் அந்தோணி, கண்டக்டர் சுதாகர், பயணிகள் குப்பம்மாள்பட்டியை சேர்ந்த மாரிச்செல்வி, லட்சுமி, கொங்கப்பட்டி பழனிச்சாமி, வெங்கலப்பட்டி பார்வதி, கடையமலை நாகலட்சுமி, நாட்ராயன், கல்லக்கிணறு பூபதி, ஆடலூர் மாரீஸ்வரி, பெரும்பாறை சேர்ந்த வீரமணி, செந்தில்குமார் ஆகிய 13 பேர் காயம் அடைந்தனர்.
இவர்கள் அனைவரும் கே.சி.பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கிறார்கள்.

No comments:

Powered by Blogger.