யாழில் ஆவா குழுவின் அட்டகாசத்தால் அதிர்ச்சியான மக்கள்
ஆவா குழுவின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவரும் தற்போது தலைமறைவாக உள்ளவருமான சண்ணா என்பவருடைய வீட்டுக்குள் புகுந்து ஆவா குழு தாக்குதல் நடத்தியுள்ளது.
மானிப்பாய் கட்டப்பாழி லேனில் உள்ள வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் இன்று மாலை நடத்தப்பட்டது.
வீட்டுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களை பெற்றோல் ஊற்றி எரியூட்டிவிட்டு தப்பித்து சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: