இலங்கையில் சொந்த மகளையே கொடூரமாக கொன்ற தந்தை நீதிபதி கொடுத்த அதிரடி தண்டனை
சித்திரவதைக்கு உள்ளாக்கி தனது மகளை கொலை செய்த தந்தைக்கு, அநுராதபுரம் மேல் நீதிமன்றம் நேற்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மூன்றரை வயதான தனது மகளை சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில், குற்றவாளியாக இனங்காணப்பட்டதையடுத்து குறித்த நபருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க, முறைப்பாட்டாளர்களுக்கு இயலுமாக இருந்ததாக வழக்கின் தீர்ப்பை அறிவித்த, வட மத்திய மகாண மேல்நீதிமன்ற நீதிபதி மஹேஷ் வீரமன் தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க, கொலை செய்த குற்றத்திற்கான தண்டனையாக பிரதிவாதிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
தம்புத்தேகம, ஹூரிகஸ்வெவ சம்பத்கமவைச் சேர்ந்த காமினி என்றழைக்கப்படும் இங்குருவத்த கெதர சேனாரத்ன என்பவருக்கே மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் ஹூரிகஸ்வெவ சுதர்ஷனகம சம்பத்கமவில் சதுனிக்கா உபேக்ஸா லக்மாலி என்ற சிறுமியை பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்தி கொலை செய்ததாக சட்டமா அதிபரினால் பிரதிவாதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments: