இலங்கையில் திடீரென காணாமல் போன யுவதிக்கு நேர்ந்த சோகம்
இரத்தினபுரியில் யுவதி ஒருவர் காணாமல் போன நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கல்தோட்டை பிரதேசத்தில் வீடு துப்பரவு செய்து கொண்டிருந்த போது யுவதி ஒருவர் திடீரென காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் வீட்டில் இருந்து அரை மீற்றர் தூரத்தில் யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.20 வயதான பாக்யா செவ்வந்தி என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நேற்றுக் காலை 10.30 மணியளவில் வீட்டினை துப்பரவு செய்யும் போது குறித்த யுவதி காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யுவதியின் மரணம் தொடர்பில் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
No comments: