யாழில் பெண்ணின் தாலிக் கொடியை அறுத்தவருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்குள் நின்ற பெண்ணின் 7 பவுண் தாலிக் கொடியை அறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறைக்குப் பயணிப்பதற்கு பஸ்ஸிலிருந்த பெண்ணின் தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு ஒருவர்தப்பி ஓட முயன்றுள்ளார்.
கொள்ளயர் தப்பிப்பதைக் கண்ட பயணிகள் சிலருடன் முச்சக்கர வண்டிச் சாரதிகளும் இணைந்து கொள்ளயரைத் துரத்திச் சென்றனர்.
கொள்ளையர் வெலிங்டன் சந்தியில் மடக்கிப் பிடிக்கப்பட்ட நிலையில், பஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டு கட்டிவைத்து நடையப்புடைக்கப்பட்டார்.
அத்துடன், பெண்ணிடம் அபகரித்த தாலிக்கொடியும் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் கொள்ளையரைக் கைது செய்து விசாரணைக்குட்படுத்தினர்.
சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது. வழக்கை விசாரித்த நீதிவான் ஏ.எஸ்.பி.போல், சந்தேகநபரை வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்
No comments: