யாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்
மகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மகளுக்கு திருமண நிகழ்வு இடம்பெற்றது. மகளின் திருமண காலத்தில் காய்ச்ச்ல் ஏற்பட்ட போதிலும், சிகிச்சை பெறாத நிலையில் நேற்று சாவகச்சேரி மருத்துவமனையில் தாயார் சிகிச்சை பெற்றார்.இன்று காலை இயற்கைக் கடன் கழித்து விட்டு வந்தவர், வீட்டுக்குள் மயங்கி வீழ்ந்தார்.
மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், அவர் ஏற்கனவே சாவடைந்துள்ளார் என மருத்துவரால் தெரிவிக்கப்பட்டது.சடலம் சாவகச்சேரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இறப்புத் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி பொலிஸார், சாவகச்சேரி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
அறிக்கையினைப் பார்வையிட்ட நீதிவான் பிரதேச திடீர் இறப்புவிசாரணை அதிகாரி திருமதி சி.தவமலர் மூலம், விசாரணைகளை நடாத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.
சாவகச்சேரி வடக்கு மடத்தடியைச் சேர்ந்த இராஜகுலசிங்கம் தயாரூபி வயது 56 என்னும் குடும்பப் பெண்ணே சாவடைந்தவராவார்.
No comments: