கொழும்பு சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்
நீர் குழாய் பொருத்தும் பணிகள் காரணமாக முகத்துவாரம் , மாதம்பிட்டி வீதி சந்தியில் இருந்து ரஜமல்வத்த சந்தி வரையான பகுதி இன்று இரவு 9 மணிமுதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
எதிர்வரும் திங்கட் கிழமை இரவு 10 மணி வரை குறித்த வீதி இவ்வாறு மூடப்படவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி , முகத்துவாரம் ஊடாக கொழும்பிற்கு பிரவேசிக்கும் வாகனங்கள் ரஜமல்வத்த சந்தியில் இடது புறம் திரும்பி அளுத் மாவத்தைக்கு பயணிக்க முடியும்.
அதேபோல் , முதுவெல்ல மாவத்தையில் இருந்து வௌியேறுவதற்காக வரும் வாகனங்கள் கனுவ சந்தியின் வலது புறமாக அளுத் மாவத்தை ஊடாக மாதம்பிட்டி சந்தியில் இடது புறம் திரும்பி பயணிக்க முடியும் என காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளது
No comments: