இலங்கையில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் யார்? பல அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம்
இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்ட அமெரிக்கர்கள் தொடர்பில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியாகி உள்ளன.
கடந்த மாதம் 22ம் திகதி பெருந்தொகை போதைப்பொருளுடன் அமெரிக்கர்கள் இருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 108 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த இருவர் தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொண்ட போது பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவிலிருந்து வருகை தந்த புலனாய்வு பொலிஸாருடன் இணைந்து இலங்கை பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த இரு அமெரிக்கர்களும் அந்நாட்டில் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரிலும் ஒருவர் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் என்றும் மற்றவர் பண தூய்மையாக்கல் நடவடிக்கையில் ஈடுபடுபவர் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் கறுப்பு பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றும் நடவடிக்கைக்காக இலங்கைக்கு அடிக்கடி வந்து செல்பவர்கள் என்பதும் விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு மிகவும் தேவையான இந்த நபர்களை கைது செய்யப்பட்டமை தொடர்பில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு அமெரிக்கா புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்
No comments: