உலகிலேயே குறைந்த வயதுடைய விமானி இவர் தான்
உலகிலேயே குறைந்த வயதுடைய விமானியாக இருக்கும் ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த 8 வயது சிறுவன் ரிமோட்டால் இயங்கும் RC ரக சர்வதேச விமான சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளார்.
நசீர் அகமது என்ற 8 வயது சிறுவன் விரைவில் நடக்கவுள்ள சர்வதேச மாஸ்டர்ஸ் RC சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்கிறார்.
இதில் 20 நாடுகளை சேர்ந்த 70 விமானிகள் கலந்து கொள்கின்றனர். ஆனால் எல்லோரும் வயதிலும், அனுபவத்திலும் நசீரை விட மிக மூத்தவர்கள் ஆவார்கள்.
நசீரின் தந்தை 25 ஆண்டுகளுக்கும் மேலாக RC விமானங்களை இயக்குவதில் கில்லாடியாக திகழ்ந்து வருகிறார்.
தந்தையை பார்த்து நசீருக்கு 5 வயதிலேயே விமானத்தை இயக்கும் ஆர்வம் ஏற்பட்டது.
இது குறித்து சிறுவன் நசீர் கூறுகையில், என் தந்தை RC தயார் செய்வதை பார்க்கும் போது எனக்கும் அதன் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.
சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன், ஒருநாள் பெரிய விமானத்தின் விமானியாக வேண்டும்.
என்பதே என் கனவு.
நசீர் இயக்க போகும் விமானம் பொம்மை விமானம் கிடையாது, சில மாதங்களாக நசீரும் அவர் தந்தையும் சேர்ந்து RC விமானத்தை தயார் செய்துள்ளனர்.
இதில் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது, இந்த விமானமானது ஒரு மணி நேரத்துக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: