தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்வதன் பலன்கள்
அர்ச்சனை என்ற சொல் அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். அர்ச்சா என்றால் சிலை என பொருள். இந்த சொல்லில் இருந்தே அர்ச்சனை, அர்ச்சித்தல், அர்ச்சித்தர் என்ற சொற்கள் வந்தன.
அர்ச்சித்தர் என்றாலும் சிலை என்றே பொருள்படும். ஆண்டவனுக்கு செய்யப்படும் ஆறுவகை உபசாரங்களுள் அர்ச்சனையே முக்கியத்துவம் பெறுகிறது. இறைவனுக்கு ஆறுவகையான உபசாரங்கள் செய்யப்படுகின்றன.
ஆறுவகை உபசாரங்கள்:
1.அபிஷேகம்: தண்ணீர், பால், தேன், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் பல பொருட்களால் செய்யப்படுவது.
2.அலங்காரம்: பட்டு பீதாம்பரத்தாலும், பொன்னாலும், மலர் மாலைகளாலும், தங்க நகைகளாலும், வைர வைடூரியங்களாலும் அழகுபடுத்துவதாகும்.
3.அர்ச்சனை: பூக்களாலும், பாக்களாலும் செய்யப்படுவது.
4.நைவேத்தியம்: பல்வேறு உணவு வகைகள், பால், பழம் முதலியவற்றை படைப்பது.
5.ஆராதனை: தூபம் காட்டுதல், தீபம் காட்டுதல்.
6.உற்சவம்: பெரு விழா நடத்தி மூர்த்தியை வலமாக வீதிகளில் கொண்டு செல்லுதல்.
கோயிலில் அர்ச்சனை செய்வது என்பது வீட்டில் பூஜை செய்வதை காட்டிலும் சக்தி பெற்றது.
அங்கிருக்கும் தெய்வம் மந்திர உச்சாடனங்களாலும், பூஜை வழிபாடுகளாலும் மிகவும் சக்தி பெற்றதாக இருக்கிறது. கேட்டதை கொடுக்கும் ஆற்றல் உண்டு.
சிலர் குறிப்பிட்ட தெய்வங்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட நாளில் அர்ச்சனை கொடுக்கிறார்கள். இது பரிகாரம் போன்றது ஆகும். சஷ்டி அன்றும் பிரதோஷம் நாளிலும் இப்படி செய்வதை நாம் பார்க்க முடியும்.
பிறந்த நட்சத்திரத்தன்று கோயிலில் அர்ச்சனை செய்வது நலத்தைக் கொடுக்கும். அந்த நட்சத்திர நாதன் ஆசிகளை வழங்குவார் என்பது ஐதீகம்.
No comments: