சுகாதார அமைச்சை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்
சுகாதார அமைச்சர் பால்மா இறக்குமதி நிறுவனங்களுக்கு சார்பாக செயற்படுவதால், சுகாதார அமைச்சை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பிரதி அமைச்சர் புத்திக பத்திரண நாட்டு மக்கள் தொடர்பில் சிந்தித்து பால்மாவால் குறித்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்திய போதிலும், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அது தொடர்பில் ஆராயாமல், பால்மா நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையிலான அறிவிப்பை விடுத்துள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த காலங்களில் மருந்துப் பொருட்கள் கொள்வனவின் போது மோசடி இடம்பெற்றுள்ளதுடன் நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரசாங்கம் பொறுப்பேற்றப் போதும் அது உரிய முறையில் இடம்பெற்றிருக்கவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுகாதார அமைச்சருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
No comments: