Header Ads

Header Ads

இந்திய மிரட்டலால் பதட்டமடைந்த பாகிஸ்தான் எடுத்துள்ள அதிரடி முடிவு

புல்வாமா தாக்குதலை கண்டித்து இந்தியா மிரட்டல் விடுத்ததை அடுத்து ஐ.நா.சபை தலையிடும் படி பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரேஷி கேட்டுக்கொண்டுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். இது இந்திய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரேஷி ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்டானியோ குட்டெரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு காஷ்மீரை சேர்ந்தவரே காரணம். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பழி சுமத்தி அப்பகுதியில் பதட்டத்தை உருவாக்கியுள்ளது.
எனவே, இதில் ஐ.நா.சபை தலையிட்டு இப்பகுதியில் அமைதி ஏற்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து ஒளிவுமறைவற்ற விசாரணை நடத்த வேண்டும்.
பதட்டத்தை தணிக்க பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் மக்களுடன் பேச்சு நடத்த இந்தியாவை வற்புறுத்த வேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

No comments:

Powered by Blogger.