பிரித்தானியாவில் இலங்கையர் அதிரடியாக கைது - கடை உரிமையாளருக்கு அபராதம்
பிரித்தானியாவில் புகலிடம் கோரிய இலங்கையர் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Gloucester பகுதியில் புகலிடம் கோருவதில் தோல்வியடைந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது அவர் சிக்கியுள்ளதாக பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவில் தொழில் செய்ய அனுமதியற்ற, புகலிடம் கோருவதில் தோல்வியடைந்த 40 வயதான இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக உள்துறை அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ள நிலையில் உள்ளார். இவ்வாறான நிலையில் கடை ஒன்றில் அனுமதியின்றி பணி செய்தமையினால் அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இலங்கையர் பணி செய்த கடை உரிமையாளருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பணி செய்ய அனுமதியற்ற ஒருவரை பணியில் அமர்த்திய குற்றச்சாட்டில் Gloucester பகுதியில் உள்ள கடை ஒன்றின் உரிமையாளருக்கு 20000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பணியில் அமர்த்தியது ஏன் என்பதற்கு பதிலளிப்பதற்காக கடை உரிமையாளருக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
No comments: