தீவிரவாதிகளை ஒரே அடியில் சாய்த்த இந்தியா
கடந்த 14ஆம் திகதி இந்தியாவின் புல்வாமா பகுதியில் இந்திய சிஆர்பிஎப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு மேற்கொண்ட தாக்குதலில் 40இற்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா குறித்த தாக்குதலை நடத்தியிருந்தது.
கடந்த 14ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றிருந்த நிலையில், உலக நாடுகள் அனைத்தும் அதற்கு கண்டனம் வெளியிட்டிருந்ததுடன், தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய இராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 வகை விமானங்கள் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதன்போது தீவிரவாதிகளின் முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலில் 200இற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாகவும் இது பாகிஸ்தானுக்கு பாரிய அடியென தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இது தொடர்பில் பாகிஸ்தான் எவ்வித நிலைப்பாட்டினையும் வெளிப்படுத்தவில்லை.
No comments: