மன்னாரில் கடும் பதற்றம்; 30 நிமிடங்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு!
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி – பேசாலை வான் பரப்பில் நேற்று சனிக்கிழமை (27) இரவு ஆள் இல்லாத விமானம் ஒன்று பறந்துள்ளதோடு, இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காட்டாஸ்பத்திரி – பேசாலை வான் பரப்பில் நேற்று இரவு 10.30 மணியளவில் குறித்த ஆள் இல்லாத விமானம் சத்தம் இன்றி பறந்துள்ளது.
இந்த நிலையில் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள இராணுவத்தினர் வானத்தை நோக்கி சுமார் 30 நிமிடங்கள் வரை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் வரை வானத்தை நோக்கிய துப்பாக்கி பிரயோக சத்தம் கேட்டதை அப்பகுதி மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும் ஆள் இல்லாத விமானம் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
இதேவேளை இன்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை முதல் தலைமன்னார் பகுதியில் முப்படையினரின் சோதனை நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: