24 மணி நேரத்தில் 381 பேர் லண்டனில் மரணம்: 2 மடங்காக அதிகரிக்கும் இறப்பு விகிதம்
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 381 பேர் கொரோனாவல் இறந்துள்ளார்கள். இது 2 மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் எத்தனை பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதனை இதுவரை பிரிட்டன் அரசு அறிவிக்கவில்லை. இது போக அரசாங்கம் அறிவிக்கும் எண்ணிக்கையில் பெரும் சுத்துமாத்து இருப்பதாக தற்போது வெளிப்படையாகவே ஆங்கில இணையங்கள் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். ஏன் எனில் முதியோர் இல்லங்களிலும், வீட்டில் கொரோனா காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையும் , பிரிட்டன் அரசு இதுவரை வெளியிடவில்லை என்ற அதிரும் தகவலும் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா முழுவதுமாக 80,000 ஆயிரம் முதியோர் இல்லங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது இவ்வாறு இருக்க மார்ச் 20ம் திகதிவரை வீட்டில் இருந்து மரணமடைந்தவர்களின் தொகை 40 என்று அரசு தற்போது தான் கூறியுள்ளது.
இதனை ஏன் முன்னர் அறிவிக்கவில்லை என்பதனை அவர்கள் கூறவில்லை. எனவே பிரித்தானிய அரசு ஒவ்வொரு நாளும் தரும் அறிவித்தல் பிழையான எண்ணிக்கையில் தான் இருக்கிறது. அத்தோடு இறப்பு எண்ணிக்கையை அவர்கள் தமக்கு ஏற்றவாறு கூட்டிக் மற்றும் குறைத்து காட்டி வருகிறார்கள்.
No comments: