லண்டனில் 1லட்சத்தி 3,000 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று: 3 வாரங்களுக்கு லாக் டவுன்
பிரிட்டனில் 1 லட்சத்தி 3,000 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 89,000 ஆயிரம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும். 13,729 பேர் மரணமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குணமடைந்துள்ள நபர்கள் பற்றிய தரவை இதுவரை பிரித்தானியா சரியாக வெளியிடவில்லை. இதுபோக மேலும் 3 வாரங்களுக்கு லாக் டவுன் தொடரும் என அமைச்சர் சற்று முன் தெரிவித்துள்ளார்.
மேலும் 4617 பேருக்கு புதிதாக தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 861 பேர் இறந்துள்ளார்கள். இறப்பவர்கள் எண்னிக்கை, சற்று குறைவடைந்துள்ளதோடு. தொற்றின் எண்ணிக்கையும் சற்று குறைவடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
No comments: