Header Ads

Header Ads

25ம் திகதி ஊபர் கார் ஓட்டிய ராஜேஷ் 11ம் திகதி ஏப்பில் கொரோனாவால் மரணம்


                     
இந்தியா பெங்களூரை சேர்ந்த தமிழர், ராஜேஷ் ஜெயசீலன்(45). இவர்  லண்டன் நோத் விக் பார்க் மருத்துவமனையில் 11ம் திகதி கொரோனா தாக்கம் காரணமாக மரணமடைந்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. 2 பிள்ளைகளின் தந்தையான ராஜேஷின் மனைவி மற்றும் பிள்ளைகள் இந்தியாவில் வசித்து வரும் நிலையில். கடந்த 10 வருடங்களாக அவர் லண்டனில் வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களாக ஊபர் கார் ஓட்டி வந்துள்ளார். கொரோனா தாக்கம் லண்டனில் அதிகமாக காணப்பட்ட போதிலும். அவர் வேலைக்கு சென்றுள்ளார். அவர் இந்தியாவில் இருக்கும் தனது குடும்பத்தை பராமரிக்கவே வேலைக்கு செல்லவேண்டிய கட்டாய சூழ் நிலையில் இருந்துள்ளார்.
ஆனால் அவர் தங்கி இருந்த வீட்டு உரிமையாளர், ஊபர் கார் ஓடுவது என்றால் எங்கள் வீட்டில் தங்கி இருக்க வேண்டாம் என்று கூறி விரட்டி விட்டார்கள். இதனால் சில நாட்களாக அவர் தனது காரில் இரவும் பகலும் தங்கி இருந்துள்ள நிலையில். ஒரு தற்காலிக இருப்பிடத்தை கண்டு பிடித்து அந்த வீட்டில் தங்க ஆரம்பித்தார். கடந்த 25ம் திகதி லண்டன் ஹீத் ரூ விமான நிலையத்திற்கு ஒரு பயணியை அவர் இறக்கியுள்ளார். இதன் பின்னர் அவருக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளது. இதனை அடுத்து அவர் சுய தனிமைப்படுத்தலில் இருந்துள்ளார். ஆனால் அவரது நிலை மோசமாகிக்கொண்டு சென்றுள்ளது.
3ம் திகதி ஏப்ரல் மாதம் தனது காரை தானே ஓட்டிக் கொண்டு அவர் நோத் விக் பார்க் வைத்தியசாலை சென்றுள்ளார். அங்கே இவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராஜேஷ்க்கு கொரோனா இருப்பதை உறுதி செய்துள்ளார்கள். ஆனால் அவர் உடல் நிலை மோசமாகி,  கடந்த 11ம் திகதி உயிரிழந்துள்ளார். இறப்பதற்கு முன்னர் அவர் வீடியோ கால் மூலம் தனது மனைவி மக்களை தொடர்பு கொள்ள ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை உறுதி செய்ய முடியவில்லை.

No comments:

Powered by Blogger.