Header Ads

Header Ads

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1067 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1067ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையில் எட்டு மருத்துவர்களும் அடங்குவார்கள் என்றார்.
புதிதாக கொரோனா தாகத்திற்கு ஆளானவர்கள் என இன்று (ஏப்ரல் 12)அடையாளம் காணப்பட்ட 106 நபர்களில், 16 நபர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்குப் பயணம் சென்றவர்கள் என்றும் மீதமுள்ள 90 நபர்கள் நோய் தொற்று ஏற்பட்டவர்களோடு தொடர்பிலிருந்தவர்கள் என தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போது வரை கொரோனா தாகத்திற்கு ஆளான மருத்துவர்களில் இரண்டு மருத்துவர்கள் அரசாங்க மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் என்றும் இரண்டு மருத்துவர்கள் ரயில்வே மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் என்றும் நான்கு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிபவர்கள் என பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போதுவரை 39,401 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் கொரோனா பாதிப்பு உள்ளதா என 10,655 மாதிரிகளை சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். கொரோனா தடுப்பு மருந்து கண்டறியும் ஆராய்ச்சியில் தமிழகம் முன்னோடியாக திகழ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறிய அவர், தமிழகத்தில் இதுவரை 50 நபர்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என்றும் குணம் பெற்ற நபர்களின் பிளாஸ்மாவை சேகரித்து ஆய்வு நடந்துவருகிறது என்றார்.

No comments:

Powered by Blogger.