52 நாடுகளில் 22,073 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு – உலக சுகாதார நிறுவனம்
ஏப்ரல் 8ஆம் தேதி வரை, 52 நாடுகளில் 22,073 மருத்துவ பணியாளர்களுக்கு இதுவரை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து நாடுகளில் இருந்தும் முழுமையான தரவுகள் கிடைக்கப் பெறவில்லை என்பதால், இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் மருத்துவப் பணியாளர்களின் பங்கு மிக முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ள சுகாதார நிறுவனம், இத்தொற்றால் பாதிக்கப்படுபவர்களை மருத்துவப் பணியாளர்களே முழுமையாக பார்த்துக் கொள்கின்றனர். அது பரவாமல் இருக்க அவர்கள் போராடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.
No comments: