நாளொன்றுக்கு 400 சவப்பெட்டிகள்: ஓய்வில்லாமல் தயாரிப்பு தீவிரம் எங்கே தெரியுமா ?
ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பிரான்சில் சவப்பெட்டி தயாரிக்கும் நிறுவனம் கால நேரம் பார்க்காமல் அதிக பெட்டிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் கடும் பாதிப்பில் உள்ளனர். இதில் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்சில் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன.
இந்நிலையில் ஐரோப்பாவின் மிகப்பெரிய சவப்பெட்டி தயாரிப்பு நிறுவனமான கிழக்கு பிரான்சில் உள்ள ஓஜிஎப் நிறுவனத்தில் பணியாளர்கள் கூடுதல் நேரம் பணியாற்றி சவப்பெட்டியை தயாரித்து வருகின்றனர். நோய் தொற்று காரணமாக மொத்தம் 4 மொடல்களில் மட்டுமே சவப்பெட்டியை உருவாக்குவதாக தொழிற்சாலை இயக்குநர் இமானுயெல் காரெட் கூறியுள்ளார். நாளொன்றிற்கு 410 சவப்பெட்டி தேவைப்படுவதால், சிலர் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளிலும் வந்து பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் நாள் ஒன்றிற்கு 370 சவப்பெட்டிகள் மட்டுமே தயாரிப்போம்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரான்சும் ஒன்று, இதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தேசிய முயற்சியில் பங்கேற்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், நாங்கள் சொல்வது போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் இறுதி தேவை, என்ன இருக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார்.
No comments: