Header Ads

Header Ads

கொரோனாவால் செயற்கைக்கோள் படத்தில் ஏற்பட்ட பாரிய மாற்றம் – நாசா வெளியிட்டுள்ள தகவல்

உலகையே உறையச்செய்துள்ள கொரோனா வைரஸ் பரவலானது, உலக மக்கள் பலரையும் பெரும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது. இதேவேளை இயற்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, சுற்றுச்சூழல் மாசடைதலானது, கணிசமாக குறைந்து வருவதாக கூறப்படுகின்றது.
வாகன பயன்பாடுகளின் குறைவு, தொழிற்சாலைகள் மூடல், ஆகியவற்றின் காரணமாக காற்று மாசுபாடு கணிசமாக குறைந்துள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் ஆரம்பமாகியதன் பின்னர் நாசா வெளியிட்டுள்ள சமீபத்திய செயற்கைக்கோள் தரவுகளின்படி, வடகிழக்கு அமெரிக்கா முழுவதும் காற்று மாசுபடுவது, கடந்த சில வாரங்களில் சுமார் 30 வீதம் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், உலகின் ஏனைய பகுதிகளையும் நாசா விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடதக்கது. இந்த செயற்கைக்கோள் படம் உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காற்று மாசுபாடு எவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

No comments:

Powered by Blogger.