அமெரிக்காவில் கைதிகளே குழி வெட்டி உடல்களை புதைத்து வருகிறார்கள்: 4260 பேர் இறப்பு
அமெரிக்காவின் நியூ-யோர்க் நகரில் மட்டும் ஒரு நாளைக்கு பல ஆயிரம் கொரோனா நோயாளிகள் இறந்து வருகிறார்கள். இன் நிலையில் நியூ-யோர்க் நகரத்திற்கு அருகாமையில் உள்ள ஹாட் என்னும் தீவில் இறந்தவர்களை புதைத்து வருகிறது அமெரிக்க அரசு. அங்கே இரவு பகலாக குழி தோண்டும் நடவடிக்கையில் கைதிகள் ஈடுபட்டுள்ளார்கள்.
தற்போது பிணையில் விடுவிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு குழிகளை தோண்டி வருவதாகவும். அவர்களுக்கு முழு உடைக் கவசம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அறியப்படுகிறது. இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில், அமெரிக்காவில் 1,400 பேர் இறந்துள்ளமை பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. இதுபோக இதுவரை 4,200 பேர் நியூ-யோர்க் நகரில் இதுவரை இறந்துள்ளார்கள்.
No comments: