பிரிட்டனின் 5G அலைவரிசை கோபுரங்கள் தீயிலிடப்பட்டன- கொரோனா வைரஸுக்கும் தொடர்புள்ளதா?
5ஜி தொழில்நுட்பத்திற்கும் கொரோனா வைரஸுக்கும் தொடர்புள்ளதாக பரப்பப்படும் "ஆதாரமற்ற" கோட்பாடுகளை நம்பி பிரிட்டனின் பல்வேறு பகுதிகளில் அலைவரிசை கோபுரங்கள் தீயிடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, நேற்று (வெள்ளிக்கிழமை) பிரிட்டனின் பர்மிங்ஹாம் பகுதியிலும், அதற்கு முந்தைய தினம் மெர்செசைடு பகுதியிலும் உள்ள அலைவரிசை கோபுரங்கள் தீயிலிடப்பட்டன.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரிட்டன் அரசு, இந்த விவகாரம் தொடர்பாக பரப்பப்பட்டு வரும் தவறான தகவல் குறித்து தங்களுக்கு தெரியும் என்றும், 5ஜி தொழில்நுட்பத்துக்கும், கொரோனா வைரஸுக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுவதற்கு “நம்பத்தகுந்த ஆதாரங்கள் எதுவும் இல்லை” என்றும் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் தொலைத்தொடர்பு நிறுவனங்களை கட்டுப்படும் மொபைல் யுகே எனும் அமைப்பு, இந்த தவறான தகவல்கள் மற்றும் கோட்பாடுகள் தீவிரமாக பரப்பப்பட்டு வருவது “கவலையளிப்பதாக” தெரிவித்துள்ளது.
No comments: