பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலியான 4 NHS ஊழியர்கள்
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன் வரிசையில் நின்ற இரண்டு செவிலியர்கள் உள்ளிட்ட நான்கு NHS ஊழியர்கள் கொரோனா தாக்கி பலியாகியுள்ளனர்.
கொரோனாவால் பலியாகும் ஒவ்வொரு உயிரும் அதை வெற்றிக்கொள்ளும் போராட்டத்தில் உந்து சக்தியாக மாறுவதாக குறித்த தகவலை வெளியிட்டு பிரித்தானிய சுகாதாரத்துறை செயலாளர் Matt Hancock தெரிவித்துள்ளார்.
NHS-ன் தலைமை அதிகாரிகளில் ஒருவரான ரூத் மே, மரணமடைந்த நால்வருக்கும் அஞ்சலி செலுத்தியதுடன், ஹீரோக்கள் எனவும் புகழ்ந்தார்.
மட்டுமின்றி, வார இறுதி நாட்களில் வெயிலின் தாக்கம் கருதி வெளியே செல்ல திட்டமிடும் பிரித்தானியர்கள் கண்டிப்பாக இந்த நால்வரின் தியாகத்தை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.
மரணமடைந்துள்ள செவிலியர்கள் அரீமா நஸ்ரீன்(36) மற்றும் எய்மி ஓ'ரூர்க்(39) ஆகிய இருவரும் மூன்று பிள்ளைகளுக்கு தாய்மார்கள் ஆவார்கள்.
பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசிய ரூத் மே, இந்த வார இறுதியில் வெயிலின் தாக்கம் மிகுதியாக இருக்கும்,மேலும் வெளியே சென்று அந்த கோடைகால கதிர்களை ரசிக்க மிகவும் தூண்டுதலாக இருக்கும்.
ஆனால் தயவுசெய்து, எய்மி மற்றும் அரீமாவை நினைவில் வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து அவர்களுக்காக வீட்டில் தங்கவும் என ரூத் மே கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் இந்த நால்வர் மட்டுமல்ல, மேலும் பலர் நாட்டு மக்களுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்யலாம், அவர்களையும் அவர்கள் சேவையையும் ஆதரிக்க விரும்புகிறேன் என்றார் ரூத் மே.
கடந்த 16 ஆண்டுகளாக நர்ஸாக சேவையாற்றிவந்த அரீமா நஸ்ரீன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலையில் வால்சால் மேனர் மருத்துவமனையில் காலமானார்.
செவிலியர் எய்மி ஓ'ரூர்க், அவர் பணிபுரிந்த கென்டில் உள்ள ராணி எலிசபெத் தி குயின் மதர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: