லண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு - மீசாலையை பிறப்பிடமாக கொண்டவர்
லண்டனில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த சியாமளன் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. . யாழ்ப்பாணம் – மீசாலை மேற்கை பிறப்பிடமாகக் கொண்ட 42 வயதான குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். நேற்றிரவு (03) இவர் உயிரிழந்ததாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்றுக்கான ஆரம்ப நிலை அறிகுறிகள் தென்பட்டதன் அடிப்படையில் அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக உயிரிழந்தவரின் குடும்ப வைத்தியரான டொக்டர் எஸ்.சிவராஜ் லண்டனில் தெரிவித்துள்ளார்.
No comments: