தாதிகள் சங்கம் அதிரடி முடிவு: கொரோனா நோயாளிகளை பராமரிக்க மறுப்பு தெரிவிக்கலாம்
பிரித்தானிய சுகாதார சேவையிடம், போதுமான அளவு பாதுகாப்பு அங்கிகள் இல்லை. குறிப்பாக முகத்தை மூடும் கவசம், மூக்கு கவசம் மற்றும் ஏப்பிரன்கள் என்பன இல்லை. இதனால் இவைகள் இன்றியே பல இடங்களில் தாதிமார்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அதுவும் கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளோடு இவர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதனால் பல தாதிமார்களுக்கு கொரோனா தொற்றியுள்ளது. இன் நிலையில் தாதிகள் சங்கம் பல முறை அரசாங்கத்திடம் கோரிக்கைகளை விடுத்து விட்டார்கள்.
ஆனால் அரசிடமோ எந்த ஒரு மேலதிக பாதுகாப்பு அங்கிகளும் இல்லை. அமெரிக்க அரச உலகளாவிய ரீதியில் அனைத்து கவசங்களையும் கொள்வனவு செய்து வருகிறது. முடியவில்லை என்றால் அமெரிக்க FBஈ கடத்தலில் கூட தற்போது இறங்கி விட்டார்கள். பல வாகனங்களியும், சரக்கு விமானங்களையும் இவர்கள் கடத்தி அமெரிக்காவுக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். இன் நிலையில், கவசங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் பிரிட்டன் அரசு இதனை இறக்குமதி செய்ய முடியாமல் தவிக்கிறது.
இதனை அடுத்து தாதிகள் சங்கம் இன்று அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அது என்னவென்றால் இனி தாதிமார் தமக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதினால் வேலை செய்ய மறுப்பு தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளார்கள். இதனை பயன்படுத்தி பல தாதிமார் இனி கொரோனா நோயாளிகளை நாங்கள் பராமரிக்க மட்டோம் என்று சொல்ல வாய்ப்புகள் உள்ளது என்ற அச்சம் எழுந்துள்ளது.
No comments: