பிரேசிலில் ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை
தென் துருவத்தில் முதல் முறையாக பிரேசில் நாட்டில் ஆயிரம் மரணம் பதிவாகி உள்ளது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தரும் தகவலின்படி இந்த தென் அமெரிக்க நாட்டில் 1,068 பேர் பலியாகி உள்ளனர். 19, 789 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல பிரேசில் மாகாணங்கள் கொரோனாவை எதிர்கொள்ளக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட சூழலில் , அந்நாட்டு அதிபர் இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் தேவையற்றவை என தொடர்ந்து பேசி வருகிறார்.
அமெரிக்காவில் ஒரே நாளில் 2000 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். போர்சுகலில் ஊரடங்கு மே 1ஆம் தேதி வரை நீடிக்கப்பட உள்ளது.
ஐர்லாந்து நாட்டில் மே 5 வரை ஊரடங்கு நீடிக்கப்பட உள்ளது.
துருக்கியில் இஸ்தான்புல் உள்ளிட்ட 31 நகரங்களுக்கு அடுத்த 48 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் எப்படி படிப்படியாக ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் என விளக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்த தொடங்கிவிட்டன. ஆனால், கொரோனா கட்டுப்பாட்டுக்கு வந்த பின்பே ஊரடங்கு தளர்த்தப்படும் என ஆளும் அரசு கூறுகிறது.
No comments: