காதலி எனக்கு கொரோனாவை தந்துட்டு போய்ட்டாள்.. அதான் அவளுடைய கழுத்தை நெரித்து கொன்றேன்
என் காதலி எனக்கு கொரோனாவை தந்துட்டு போய்ட்டாள்.. அதான் அவளுடைய கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன். என்று இளைஞர் வாக்குமூலம் தந்துள்ளார்.. இத்தனைக்கும் இவர் ஒரு ஆண் நர்ஸ்!! கொரோனாவின் தாக்கத்தில் சீரழிந்து கொண்டிருப்பதில் முக்கிய முதன்மையானது இத்தாலி.. இங்குதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு போன் வந்துள்ளது.. அதில் பேசியவர். “என் பேர் அந்தோனியா, நான் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரியில் நர்ஸ், நான் என் காதலியை கொன்னுட்டேன்” என்று வீட்டு அட்ரஸையும் சொல்லி போனை வைத்துவிட்டார்.
இதையடுத்து போலீசார் இளைஞரின் வீட்டிற்கு விரைந்து வந்தனர்.. அங்கு ஒரு இளம்பெண் சடலமாக விழுந்து கிடந்தார்.. அந்த சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பிய போலீசார், அந்தோனியாவை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் சொன்னதாவது: “என் காதலி பெயர் குவாரண்டினா.. வயசு 27… அவள் ஒரு டாக்டர்.. நானும், அவளும் சிசிலி ஆஸ்பத்திரியில்தான் வேலை பார்க்கிறோம்.
13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆஸ்பத்திரியில் வைரஸ் தாக்கி இறந்துவிட்டனர். நாங்கள் எங்கள் வேலையை சேவையாக நினைத்து செய்தோம். ஆனால் குவாரண்டினா, ஒருநாள், தன்னையும் அறியாமல் எனக்கு வைரஸை பரப்பிவிட்டதாக சொன்னாள். இது எனக்கு ஷாக்-ஆக இருந்தது.. ஆத்திரத்தையும் தந்தது.. அதனால்தான் குவாரண்டினாவின் கழுத்தை என் கையாலேயே நெரித்து கொன்றேன்.
கடைசி நேரத்துல உயிர் போறப்போ அவள் எதையோ சொல்ல வந்தாள்.. ஆனால் விடலயே.. அப்படியே கழுத்தை கெட்டியா பிடிச்சு நெரிச்சிட்டேன்” என்றார். இவ்வளவையும் வாக்குமூலமாக சொல்லி முடித்தார் அந்தோனியா.இதற்கு பிறகு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.. அங்கேதான் ஒரு ட்விஸ்ட்.. அந்தோனி – குவாரண்டினா 2 பேருக்குமே கொரோனா தொற்று இல்லையாம்.
No comments: