கொரோனா தடையை மீறிய வெள்ளையருக்கு பொலிஸ் கொடுத்த வித்தியாசமான தண்டனை
இந்தியாவில் கொரோனாவால் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு விதிகளை மீறிய வெளிநாட்டினர் சிலருக்கு அந்நாட்டில் இருக்கும் பொலிசார் கொடுத்த வித்தியாசமான தண்டனையின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உத்திரகாண்டின் ரிஷிகேஷில் இருக்கும் பிரபலமான ஆன்மிக ஆஷிரமம் ஒன்றிற்கு மெக்சிகோ, அவுஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரியாவை சேர்ந்த வெளிநாட்டினர் சென்றுள்ளனர். நாட்டில் தற்போது அத்தியாசவசிய தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது.
இவர்கள் அந்த விதியை மீறியதன் காரணமாக அங்கிருந்த பொலிசார் இவர்களை பிடித்து விசாரித்து, இப்படி தேவையில்லாமல் வரக் கூடாது என்று அறிவுரை கூறியதுடன், 500 முறை மன்னித்துவிடுங்கள் என்று எழுதும் படி வித்தியாசமான தண்டனை கொடுத்துள்ளனர். இதனை இவர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள்.
No comments: