அமெரிக்காவையே மீட்டெடுக்கும் குழுவில் தமிழன்: டொனால் ரம் நேரடி நியமனம் இதோ
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உருவாக்கியுள்ள பொருளாதார , மீழ் எழுச்சிக் குழுவில் சுந்தர் பிச்சை இடம் பிடித்துள்ளார். இதில் மைக்ரோ சாப்ஃட் நிறுவன சதிய நாதெல்லாவும் அடங்குவதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸால் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 1.34 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா மோசமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவின் பொருளாதாரமும் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளநிலையில் வீழ்ந்த அந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக புதிய குழு ஒன்றை அதிபர் ட்ரம்ப் அமைத்துள்ளார் .
மாபெரும் அமெரிக்கப் பொருளாதார புத்தாக்க மீட்டெழுச்சி தொழிற்துறை குழு’ என அழைக்கப்படும் இந்தக் குழு அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான அறிவுரைகளை அமெரிக்க அரசிற்கு வழங்க உள்ளது.இந்தக் குழுவில் சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா, ஐபிஎம் நிறுவனத்தின் அரவிந்த் கிருஷ்ணா, மைக்ரான் நிறுவனத்தின் சஞ்சய் மெஹ்ரோத்ரா, மாஸ்டர் கார்டிலிருந்து அஜய் பங்கா, ஆன் முகர்ஜி ஆகிய ஆறு இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் நேரடியாக டொனால் ரம்புக்கு தமது பரிந்துரைகளை வழங்க இருக்கிறார்கள் என மேலும் அறியப்படுகிறது.
No comments: