Header Ads

Header Ads

லண்டனில் பிரபல மிருதங்க ஆசிரியர் ஆனந்த நடேசன் கொரோனாவல் இன்று அதிகாலை உயிரிழந்தார்

லண்டனில் பல வருடங்களாக, தமிழ் மாணவர்களுக்கு மிருதங்கம் சொல்லிக் கொடுத்துவந்த ஆனந்த நடேசன் மாஸ்டர் அவர்கள், இன்று அதிகாலை 1மணிக்கு, உலகை விட்டுப் பிரிந்தார். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, நோத் விக் பார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இவர் சில தினங்களாக கோமா நிலையில் இருந்தார். மேலதிக சிகிச்சைக்காக அவரை, Central London வைத்தியசாலைக்கு கொண்டு சென்றும். அவரது உயிரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. நோத் விக் பார்க் மருத்துவமனையில் வேலை செய்யும் சில தமிழ் மருத்துவர்கள், ஆரம்பத்தில் இருந்தே இவர் நிலையை அறிந்து. இவருக்கு நல்ல சிகிச்சை வழங்கி வந்தார்கள்.
ஆனால் அவரது உடல் அதனை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கவில்லை. ஆனந்த நடேசன் மாஸ்டரிடம் பல நூறு மாணவர்கள் மிருதங்கம் பயின்று உள்ளார்கள். அவர்கள் அனைவரையும் இன் நிகழ்வு பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கந்தையா ஆனந்த நடேசன் மாஸ்டர் அவர்களின் ஆத்மசாந்திக்கு நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.
மிகவும் சிறந்த மிருதங்க ஆசிரியராக எண்ணற்ற நல்ல மாணவர்களை , உருவாக்கிய மனிதநேயம் மிக்க அன்பு நண்பரின் இழப்பு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு. எல்லோருடனும் அன்பாக பழகும் பண்பாளர். அன்னாரது புனித ஆன்மா சாந்தி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்தார்,மாணவர்கள், பெற்றோர், உற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி… சாந்தி…. சாந்தி….

No comments:

Powered by Blogger.