கொரோனா தொற்று பரவலை தடுக்க என்ன செய்கிறது கியூபா?
கியூபாவின் சுகாதார அமைப்பு குறித்து நீங்கள் அதிகமாக கேள்விப்பட்டிருக்கக்கூடும்.
அதுமட்டுமல்லாமல் மேற்கத்திய நாடுகளைக் காட்டிலும் அந்நாட்டில், மக்கள்தொகை உடனான மருத்துவர்களின் விகிதம் அதிகம் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
கியூபாவின் மருத்துவர்கள் மனிதாபிமான அடிப்படையில் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றுவது குறித்தும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். சமீபத்தில் அவர்கள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலிக்கு சென்றனர்.
தங்கள் நாட்டிலும் கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
அங்கு 30,000 மருத்துவ மாணவர்கள் வீடு வீடாக சென்று மக்களிடம் வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது வெளிநாட்டினருடன் தொடர்பு வைத்திருந்தார்களா என்பதையும் கேட்டறிகின்றனர்.
இந்த மாணவர்கள் மீண்டும் மீண்டும் இந்த பணியை நாடு முழுவதும் தொடர்ந்து செய்கின்றனர்.
அதில் சிலர் நாள் ஒன்றுக்கு 300 குடும்பங்களை சந்திக்கின்றனர் என்கிறது ஏ.எஃப்.பி செய்தி முகமை. இதுவரை கியூபாவில் சுமார் 200 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
No comments: