பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இன்று கொரோனா தடுப்பூசி பரிசோதனை!
சீனாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 13 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவில் மட்டும் 3.67 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 10,871 ஆக உள்ளது. ஸ்பெயினில் 136,675பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு 13,341 ஆக உள்ளது. இத்தாலியில் 132,547 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 16,523- பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.உலகின் பல விஞ்ஞானிகள் குழு தனித்தும் சமூகமாகவும் அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
கொரோனா தடுப்பூசி கண்டறியும் முயற்சிக்காக பில் கேட்ஸ் அறக்கட்டளையானது இதுவரை 100 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக அளித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா மாகாணத்தில் பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் ஐஎன்ஓ – 4800 என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசியை இன்று பரிசோதனை செய்ய உள்ளனர். இதற்காக 40 பேரை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். சோதனைக்கு முன்வந்தவர்களுக்கு 4 வார இடைவெளியில் தடுப்பூசி போடப்படும்.
இந்த பரிசோதனை வெற்றியடைந்தால், அடுத்ததாக உலக சுகாதார மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். 2020-க்குள் 10 லட்சம் தடுப்பூசிகளை உருவாக்க திட்டமிட்டு உள்ளனர். கொரோனா வைரஸிற்காக அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்படும் 2-வது தடுப்பூசி இதுவாகும்.
No comments: