அமேசன் காட்டு வாசிகள் முற்றாக அழியும் நிலை: அங்கேயும் கொரோனா
பிரேசில் நாட்டில் உள்ள அமேசன் காடுகளில், இதுவரை மனிதர்களோடு தொடர்பில் இல்லாத பழங்குடியினர் வாழ்ந்து வருகிறார்கள். இவ்வாறு அந்தமான் நிக்கோபார் தீவிகளில், சில தீவுகளில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களை அன் நாட்டு அரசாங்கம் பாதுகாத்து வருகிறது. அதாவது அந்தப் பகுதிகளுக்கு மக்கள் செல்லக் கூடாது என்று தடை விதித்துள்ளார்கள். ஆனால் அமேசன் காடுகளில், அதிகாரிகளை ஏமாற்றி விட்டு அவ்வப்போது ஆராட்சியாளர்கள் நுளைவது உண்டு. அவர்களில் சிலர் பழங்குடி மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தும் இருக்கிறார்கள்.
இன் நிலையில் அமேசன் காடுகளில் வாழும் ஒருவகையான பழங்குடியினருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை வெளியுலக மனிதர்களே, கொண்டு போய் பரப்பி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களை வைத்தியசாலை எடுத்துச் செல்லவும் முடியாது. எனவே இந்த இனத்தில் உள்ளவர்கள் பலர் இறக்க கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
No comments: